
கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி!
08.02.2025 09:36:53
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஜனவரி மாத இறுதியில் 6.06 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2024 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 0.9% வீழ்ச்சியாகும். கடந்த 2024 டிசம்பரில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 6.12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.