மருத்துவமனையில் வைகோ அனுமதி.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து, வலது கை தோள்பட்டையில் வைக்கப்பட்டிருந்த பிளேட்டை அகற்ற இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாதம் அவர் கீழே விழுந்ததில், வலது கை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அப்போது அவருக்கு தோள்பட்டை எலும்பில் பிளேட் வைக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில், தற்போது எலும்புகள் கூடிவிட்டதால் பிளேட்டை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்ததாகவும் அதன் அடிப்படையில் வைகோ இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
வைகோ அவர்கள் இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. வைகோ விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என அவரது கட்சியின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். வைகோ மீண்டும் சுகமாகி கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும் என மதிமுக தொண்டர்கள் அனைவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்