இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தானுக்கு கிடைக்குமா?

01.07.2025 08:04:46

இந்தியா பிரம்மோஸ் ஏவுகணையை பாகிஸ்தானுக்கு கொடுக்குமா என கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியாவின் மூத்த விஞ்ஞானி டாக்டர் அ. சிவதாணு பிள்ளை கூறிய நையாண்டியான பதில் வைரலாகிவருகிறது. இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை குறித்து, சமீபத்தில் நடைபெற்ற ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியில், பாகிஸ்தான் இராணுவ ஜெனரலுடனான ஒரு அரிய உரையாடலை டாக்டர் சிவதாணு பிள்ளை நினைவுகூர்ந்தார்.

அப்போது அந்த பாகிஸ்தான் இராணுவ அதிகாரி கேட்ட கேள்விக்கு யாரும் எதிர்பார்க்காத பதிலைக் கூறியுள்ளார்.

துபாயில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியில், பாகிஸ்தானை சேர்ந்த ஒரு மூத்த இராணுவ அதிகாரி தன்னை அணுகி, “இந்தியா பிரம்மோஸ் ஏவுகணையை பாகிஸ்தானுக்கு விற்குமா” என கேட்டதாக சிவதாணு பிள்ளை கூறினார்.

அதற்கு நகைச்சுவையாக, “பாகிஸ்தானுக்கு இலவசமாகவே வழங்கப்படும்!” என பதிலளித்ததாக தெரிவித்தார்.

அதாவது, பாகிஸ்தான் மீது இலவசமாகவே ஏவுகணையை செலுத்துவோம் என்பதை அவர் நையாண்டியாக பதிலளித்துள்ளார்.

பிரம்மோஸ் ஏவுகணை உலகின் விரைவான ஸூப்பர்சோனிக் ஏவுகணையாக காணப்படுகிறது.

இந்தியாவின் DRDO மற்றும் ரஷ்யாவின் NPO Mashinostroyeniya இணைந்து உருவாக்கிய இந்த ஏவுகணை, Mach 2.8 முதல் 3.5 வேகத்தில் பறக்கிறது, மேலும் 290 முதல் 800 கிமீ வரையிலான தொலைவுகளில் தாக்குதல் நடத்தக்கூடியது.

எதிர்காலத்தில், 1,500 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய Bramhos 2.0 பதிப்பும் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“fire-and-forget” navigation systems, low radar visibility, நிலம், கடல், வான் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவக்கூடிய திறன் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.