பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்து!

16.09.2022 21:48:19

சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு முழுமையாக இணங்கும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள், அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தேவையற்ற பலாத்காரத்தைப் பயன்படுத்துவதைக் கண்டித்துள்ளனர்.

அத்துடன் தூதுக்குழுவினர் பொறுப்புக்கூறல் மற்றும் தண்டனையின்மையில் இருந்து விடுபடுவதற்கான உடனடி நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.