ஜூலை 3ம் தேதி ஓடிடியில் வெளியாகும் கருடன்.

02.07.2024 00:36:37

நடிகர் சூரி அடுத்தடுத்து நாயகனாக களம் இறங்கி வருகிறார். கடந்த ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்திருந்த விடுதலைப் படம் வெளியாகி அவருக்கு மிகப்பெரிய ஹீரோ இமேஜை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்நிலையில் கடந்து சில வாரங்களுக்கு முன்பு சூரியின் நடிப்பில் வெளியான கருடன் படமும் அவருக்கு மிகச் சிறப்பாக கை கொடுத்துள்ளது. இந்த படத்தில் சொக்கன் என்ற கேரக்டரில் சூரி நடித்திருந்த நிலையில் படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ரோஷினி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் வெளியீட்டிற்காக ரசிகர்கள் தற்போது ஆவலுடன் காத்திருக்கின்றனர்.