பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு.
07.01.2026 14:13:00
1979 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, ‘பாராளுமன்ற ஓய்வூதிய (இரத்துச் செய்தல்) சட்டமூலம்’ பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் இந்தச் சட்டமூலம் இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.