மேட்டூர் 16 கண் மதங்கள் வழியாக மீண்டும் தண்ணீர் திறப்பு

31.07.2022 10:15:00

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர்: மேட்டூர் அணை இந்த மாதம் 16ஆம் தேதி காலை தன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது இதனைத் தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீடித்ததால் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் 25 ஆம் தேதி வரை 16 கண் மதங்கள் வழியாக திறந்து விடப்பட்டது

. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து ஆனது வினாடிக்கு 23 ஆயிரம் கன அடியாக குறைந்ததால் 25 ஆம் தேதி இரவு முதல் அணையை ஒட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை அணைக்கு நீர்வரத்து ஆனது மீண்டும் வினாடிக்கு 25,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் அணையின் உபரி நீர் 16 கண் மதங்கள் வழியாக மீண்டும் 2500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வருவாய் துறை சார்பில் மேட்டூர் தாசில்தார் குமார் சாமி தலைமையில் டாம் டாம் மூலம் தாழ்வான பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது..