
அதிமுக கூட்டணி தொடர்பாக தவெக நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை!
18.07.2025 15:40:55
சமீபத்திய அதிமுக கூட்டணி தொடர்பான விமர்சனங்கள் குறித்து தவெக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஆட்சியில் இருந்து திமுகவை அகற்றவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். |
தமிழக வெற்றி கழக கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு அதிமுக பேசி வருவதாக தகவலை பரப்பி வருகிறார்கள். சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் கையாளும் தந்திரங்களையும், வியூகங்களையும் வெளியில் அனைவருக்கும் தெரியும் வகையில் பதில் அளிக்க முடியாது" என்றார். இந்நிலையில், சமீபத்திய அதிமுக கூட்டணி தொடர்பான விமர்சனங்கள் குறித்து யாரும் பதில் அளிக்க வேண்டாம் என்று தவெக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார். |