உலகின் மிகப்பெரிய வாய் கொண்ட பெண் என்ற கின்னஸ் பட்டத்துடன் வலம் வரும் சமந்தா ராம்ஸ்டெல்.!!
உலகின் மிகப்பெரிய வாய் கொண்ட பெண் என்ற கின்னஸ் பட்டத்துடன் வலம் வரும் சமந்தா ராம்ஸ்டெல்தன்னுடைய அகலமான வாய் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்.
அமெரிக்காவின் கனெக்டி கட் மாகாணத்தைச் சேர்ந்தவர் சமந்தா ராம்ஸ்டெல் . 31 வயதான இவர் ஒரு டிக் டாக் ஆர்வலர்.டிக் டாக் செயலியில் ஏராளமான வீடியோக்கள் பதிவிட்டு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர். டிக் டாக்கில் இவர் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் சாப்பிடுவது தொடர்பானது தான்.
ஒரே நேரத்தில் மிகப்பெரிய தின்பண்டத்தை வாயில் வைத்து அரைத்து தள்ளி விடுவார். சிறிய உணவுப்பொருளாக இருந்தால் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்றை வாயின் உள்ளேத் தள்ளுவார். இதுதான் சமந்தாவின் தனிச்சிறப்பு.
இவரின் பிரம்மிக்க வைக்கும் செயல் டிக் டாக் செயலி மூலம் வெகுவிரைவில் பிரபலமாகி விட்டது. 5 கோடி பேர் வரை சமந்தாவின் வீடியோக்களை பார்த்தனர்.மேலும், உலகின் மிகப்பெரிய வாய் கொண்ட பெண் என்ற பட்டத்தை பெற கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்யும்படி சமந்தாவிடம் அவரின் ரசிகர்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்த சமந்தா அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். சமந்தா வாயில் உள்ள இடைவெளியின் அகலம் 6.56 செ.மீ ஆக உள்ளது. ஒட்டு மொத்த வாயையும் அளந்துப் பார்த்தால் 10 செ .மீ.க்கும் அதிகமாக உள்ளது.
இப்போது உலகின் மிகப்பெரிய வாய் கொண்ட பெண் என்ற பட்டத்துடன் வலம் வருகிறார் சமந்தா ராம்ஸ்டெல். இவர் ஆரம்பகாலத்தில் தன்னுடைய வாயை பாதுகாப்பற்றதாக நினைத்துக்கொண்டிருந்தார்.ஆனால் அதுவே அவரை உலகம் முழுவதும் பிரபலமடைய செய்துள்ளது. சமந்தாவிற்கு தற்போது சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.