‘ஜெர்மன் நாட்டிற்குள் நுழைய முயற்சி’- நடுக்கடலில் சிக்கிய 482 அகதிகள்
24.11.2021 11:35:36
ஜெர்மன் நாட்டிற்குள் நுழைய முயன்று நடுக்கடலில் மாட்டிக்கொண்ட 482 அகதிகளை மீட்பு குழுவினர் போராடி மீட்டதாக என்.ஜி.ஓ அமைப்பு தகவல் தெரிவித்திருக்கிறது.
பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல காரணங்களால் தங்கள் நாடுகளிலிருந்து சில மக்கள் வெளியேறுகிறார்கள். அவர்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய முயற்சித்து வருகிறார்கள். எனவே, கடலில் நீந்தி உயிரை பணயம் வைத்து ஆபத்தான நிலையில் பயணிக்கிறார்கள்.
இதனால், பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்நிலையில், சுமார் 482 அகதிகள் மத்திய தரைக்கடல் பகுதியில், படகுகள் வழியே ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர். அப்போது அவர்கள் நடுக்கடலில் மாட்டிக்கொண்டனர். அதன்பின்பு, அவர்களை போராடி மீட்டதாக என்ஜிஓ அமைப்பு கூறியிருக்கிறது.