பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

17.04.2024 08:09:01

பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு எகிப்து மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வது தொடர்பில், பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்த விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக, எகிப்து மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

எகிப்து நாடானது இஸ்ரேல் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.

 

பிரித்தானியர்களை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்கள் நடந்துவரும் நிலையில், கடத்தப்படும் அபாயமும் உள்ளது. ஆகவே, எகிப்துக்கு சுற்றுலா செல்வது ஆபத்தானது என்றும் சுற்றுலா செல்வோர் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டுமென்றும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

இதனிடையே, மொராக்கோவில் தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தக்கூடும். மேலும், மொராக்கோவில் வாழ்வோரிடையே ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது நிலையில், சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள் கடத்தப்படும் அபாயம் காணப்படுகின்றது.

இதேவேளை, அண்மையில் நடத்தப்பட்ட இஸ்ரேல் ஈரான் தாக்குதல்களின்போது எகிப்து மீதோ, மொராக்கோ மீதோ தாக்குதல்கள் நடத்தப்படவில்லை.

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த இரண்டு நாடுகளுக்கும் சுற்றுலா செல்வோர் மிகவும் கவனமாக செயல்படவேண்டும் என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் பிரித்தானியர்களை அறிவுறுத்தியுள்ளது.