ஆயுத முனையில் கார் கடத்தல்

29.11.2024 07:52:16

கனடாவின் ரொரன்ரோ நகரில், ஒரு தமிழ் தம்பதியினர் உட்பட மூவர் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவின் ரொரன்ரோ நகரில் தமிழ் தம்பதியினர் உட்பட மூவர் இணைந்து ஆயுத முனையில் கார் ஒன்றை கடத்தி சென்றுள்ளனர். அப்போது பிரம்டன் பகுதியில் அரசு பேருந்து மீது கார் மோதி விபத்தில் சிக்கியதையடுத்து தமிழ் தம்பதியினர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

  

இதையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட மூவரும் ரொரன்ரோவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, வாகன கொள்ளை மற்றும் வீட்டுக்குள் புகுந்து திருடுதல் போன்ற குற்றச் செயல்களில் இவர்கள் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

இந்த கைது செய்யப்பட்ட மூவரில் 31 வயதான அனெஸ்டன் கணேசமூர்த்தி மற்றும் 33 வயதான அபிரா பொன்னய்யா ஆகியோர் தமிழ் தம்பதியர் ஆவார்கள்.