'யசோதா'

09.09.2022 11:11:32

இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள படம் யசோதா. யசோதா படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகை சமந்தா நடிப்பில் தற்போது 'யசோதா' என்ற பான் இந்தியா திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் இன்று (09-09-2022) காலை 10.24-க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.