இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் பலி, 6 பேர் காயம் !

18.07.2023 07:25:00


எல்ல – வெல்லவாய வீதியில் ரக்கித்தாகந்த விகாரை வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (18) காலை பேருந்து ஒன்று சரிவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்