பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு

24.11.2021 09:00:00

 

இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நாடாளுமன்ற கூட்டத்தொரில் சுமார் 26 சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை வங்கி சீர்த்திருத்தச் சட்டத்தின் கீழ் இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.