அனுரகுமாரவுடன் கலந்துரையாட நேரம் ஒதுக்கப்படும்!

03.12.2024 08:09:51

அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உடன் கலந்துரையாடுவதற்கு, இவ்வாரம் நேரம் ஒதுக்கி தரப்படும் என தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய ஒழுங்கு பிரச்சினைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.