6 நாட்களாகியும் ரூ.10 கோடியை தொடாத சிக்மா.

08.10.2026 08:32:50

விஜய் மகன் சஞ்சய் இயக்கி வெளிவந்துள்ள படம் சிக்மா.  சந்தீப் கிஷன் நாயகனாக  நடித்துள்ள இந்த படத்தில் ஃபரியா அப்துல்லா, சம்பத், ராஜ், ராஜூ சுந்தர்ரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைக்கா புரொடெக்சன் தயாரித்துள்ள இந்த படம் கடந்த வாரம் வெளியானது.  மிகப்பெரிய ஸ்டார் நடிகரின் மகன் படம் என்பதால் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படம் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றது. 

இந்த விமர்சனங்கள் காரணமாக வசூலிலும் இப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

இந்த நிலையில் சிக்மா படம் 6ம் நாள் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 6ம் நாள் பாக்ஸ் ஆபிஸீல்  இந்தியாவில் சுமார் ரூ.71 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, படம் வெளியான ஆறு நாட்களில் மொத்தமாக சுமார் ரூ.7.69 கோடி வசூல் செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.