கல்முனை மாநகர சபையின் வரி அறவீட்டாளர்களுக்கான Smart Phone App செயலி ஒன்று அறிமுகம் !
10.04.2021 09:43:50
கல்முனை மாநகர சபையின் வரி அறவீட்டாளர்களுக்கான Smart Phone App செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த செயலியின் அறிமுக நிகழ்வு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
இதன் அறிமுக நிகழ்வில் மாநகர சபையின் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், ஆணையாளர் எம்.சி.அன்சார் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக். சுகாதார வைத்திய அதிகாரி அர்ஷாத் காரியப்பர் உட்பட வரி அறவீட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது குறித்த செயலியின் நோக்கம், பயன்பாடுகள் மற்றும் செயற்படுத்தும் முறைகள் தொடர்பாக அதன் வடிவமைப்பாளர் காமிஸ் கலீஸ் விளக்கமளித்தார்.