கிளிநொச்சியில் இடம்பெற்ற மாலதியின் 34 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு

10.10.2021 13:20:21

கிளிநொச்சியில் இடம்பெற்ற மாலதியின் 34 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப்போன முதலாவது பெண் மாவீரர் மாலதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் கிளிநொச்சியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
 
நினைவேந்தலை தடுக்கும் நோக்கில் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயத்திற்கு முன்பாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினரால் நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயம் அமைந்திருக்கும் வீதியின் நுழைவாயிலில் இராணுவத்தடை அமைத்து அவ்வீதியால் செல்பவர்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்தியுள்ளனர்.