இலங்கையில் ஆலங்கட்டி மழை
22.08.2021 05:58:37
இலங்கையில் வெலிமடை பகுதியில் பனி மழை (ஆலங்கட்டி மழை) பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5 நிமிடங்கள் விடாமல் பனி மழை பெய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆலங்கட்டி மழை (hail) வானத்திலிருந்து விழும் திடநிலைப் பொழிவாகும்.
பந்துகளாகவோ ஒழுங்கற்ற உருண்டைகளாகவோ உள்ள பனிக்கட்டிகளான இவற்றை ஆலங்கட்டி என்கிறோம்.
வானிலை செயற்கைக் கோள்களின் மூலமும் வானிலை ரேடார் ஒளிப்படங்களிலிருந்தும் ஆலங்கட்டி மழை வாய்ப்புள்ள மேகங்களை கண்டறியலாம்.
இதேவேளை, இலங்கையில் இதற்கு முன்னரும் பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.