ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் சம்மேளனப் பொதுக்கூட்டம் !
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நான்காவது வருடாந்த சம்மேளனப் பொதுக்கூட்டமும் மன்னார் தேர்தல் தொகுதிக்கான இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டமும் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டம், இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கே.காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அசோக்க பிரியந்த கலந்துகொண்டார்.
இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டதுடன் இளைஞர் யுவதிகள் பலர் பங்குபற்றியிருந்தனர்.
இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு, இளைஞர், யுவதிகளின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.