‘அப்பா என் விரல் பிடித்திருக்கிறார்’ : ஆண் குழந்தை பிறந்துள்ளதை அறிவித்தார் சிவா !

13.07.2021 11:08:48

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று (திங்கட்கிழமை) ஆண்குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து சமூகவலைத்தள பக்கத்தில்  பதிவிட்டுள்ள அவர், “18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார்.

என் மகனாக என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த் துளிகளால் நன்றி. அம்மாவும் குழுந்தையும் நலம்’ எனத் தெரிவித்துள்ளார்.

18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி

அம்மாவும் குழந்தையும் நலம்

🙏