கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் கையளிப்பு!
பதவி விலகல்
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபாக்ச தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பி வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றிரவு இரவு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஊடாக பதவி விலகல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இன்று காலை சபாநாயகரால் சிறிலங்கா அதிபரின் பதவி விலகல் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதில் சிறிலங்கா அதிபராக ரணில்
இந் நிலையில் சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் சிறிலங்கா அதிபராக பதவிப் பிரமாணம் செய்யத் தயாராக உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்க சிறிலங்கா அதிபராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளன.
இதனால், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சிறிலங்கா அதிபராக பதவிப் பிரமாணம் செய்தால், கொழும்பின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்படும் என குறிப்பிடப்படுகின்றது.