ஒமிக்ரோன் பரவலின் எதிரொலி! நாட்டு எல்லைகளை மூடும் முதல் நாடு

28.11.2021 16:46:09

  ஒமிக்ரோன்( Omicron) வைரஸ் திரிபு தொற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து இஸ்ரேல் தனது நாட்டு எல்லைகளை மூடியுள்ளது. 

ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக அனைத்து எல்லைகளையும் மூடும் முதல் நாடு இஸ்ரேல் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் வெளிநாட்டவர்கள் தமது நாட்டுக்குள் வரவும் அந்நாடு தடைவிதித்துள்ளது.

இந்த தடையானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளதுடன் அமைச்சரவையும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

குறைந்தது 14 நாட்களுக்கு இந்த தடை நடைமுறைப்படுத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி பெனட் தெரிவித்துள்ளார்.