உள்ளுராட்சி தேர்தலை நடத்த அவகாசம் வேண்டும் – தமிழக அரசு

23.06.2021 12:57:48

 

தமிழகத்தின் 9 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளுராட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தமிழக அரசு மேற்படி கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த மாவட்டங்களில் தேர்தலை நடத்துவதற்கு கூடுதல் அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வாக்காளர்கள், அதிகாரிகளுக்கு கொரோனா இடையூறு இன்றி பாதுகாப்பை கருத்திற்கொண்டு தேர்தல் திகதி முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது