சாரி கேட்ட ரஜினிகாந்த்
09.08.2023 11:48:17
நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அண்ணாத்த படம் தொடங்குவதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஜினிகாந்த் திடீரென இமயமலைக்கு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இன்று காலை ரஜினிகாந்த் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியில் போலீஸ் பாதுகாப்புடன் சென்றார். அப்போது அவருக்கு முன்னால் வரிசையில் பலர் நின்று கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் போலீசார் ரஜினியிடம் முன்னால் சென்று விடலாம் என கூறி அழைத்துச் சென்றனர். அப்போது ரஜினி, வரிசையில் நிற்பவர்களை பார்த்து "ரொம்ப நேரமா நிற்பீங்க... சாரி" என கூறி விட்டு சென்றார். இதையடுத்து அங்கு நின்றவர்கள் பரவாயில்லை என்று கூறி புன்னகைத்து ரஜினியை அனுப்பி வைத்தனர்.