
முக்கிய முடிவை அறிவித்துள்ள ஜேர்மன் சேன்சலர்!
ஜேர்மனி உக்ரைனுக்கு அனுப்பும் ஆயுதங்கள் குறித்து சேன்சலர் மெர்ஸ் முக்கிய முடிவை அறிவித்துள்ளர். ஜேர்மனி இனி உக்ரைனுக்கு வழங்கும் இராணுவ உதவிகள் குறித்து பொது அறிக்கைகள் வெளியிடப்படாது என ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் அறிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவில் இருந்தபோது RTL/ntv ஊடகத்துடன் பேசிய அவர், "என் தலைமையிலான ஆட்சி, ஆயுதங்கள், ரகங்கள், அளவுகள் போன்ற விவாதங்களை பொதுமக்கள் பார்வையில் இருந்து அகற்றும்," என்றார். |
ரஷ்யாவுக்கு உளவுத்தகவல் கிடைக்காத வகையில் “தெளிவில்லா தந்திரம்” (strategic ambiguity) வகுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது என ராய்டர்ஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தது 2022 பிப்ரவரியில் ரஷ்யா உக்ரைனை முழுமையாக தாக்கியதிலிருந்து, ஜேர்மனியின் இராணுவ உதவிகள் குறித்த விபரங்கள் ஆரம்பத்தில் சிதறியவாறு வெளியானன. பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகங்களின் அழுத்தத்தால், ஜேர்மன் அரசு பட்டியலிடத் தொடங்கியது. மெர்ஸ் தனது பேச்சில், "ஜேர்மனி உக்ரைனுக்கு வழங்கும் நிதியுதவி தொடரும். மற்ற ஐரோப்பிய நாடுகளும் அதே போல பங்களிக்க வேண்டும்," எனக் கேட்டுக்கொண்டார். இந்த முடிவு, ரஷ்யாவை தவிர்க்கும் நுட்பமான நடவடிக்கையாகவும், உக்ரைனுக்கு ஆதரவை மறுபடியும் உறுதிப்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. |