யாழில் ஒன்றுகூடிய இலங்கைத் தமிழரசு கட்சியினர்

08.07.2023 15:55:50

 

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று (08) சனிக்கிழமை யாழ்ப்பாணம் கொக்குவில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்று வருகின்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

கலந்துகொண்டவர்கள்

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், மதியாபரணம் சுமந்திரன், கலையரசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளதோடு வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த மத்திய குழு கூட்டம் அடிதடியில் முடிந்த நிலையில், முன்னாள் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.