இன்று அரச நிறுவனங்களை பரிசோதிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாம் கட்டம் ஆரம்பம்

15.03.2021 09:18:26

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனங்களை பரிசோதிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாம் கட்டம் இன்று (திங்கட்கிழமை) ஹம்பாந்தோட்டை நகரில் ஆரம்பமாகிறது.

அரச நிறுவனங்களின் தவறுகளைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவது இதன் நோக்கமாகும்.

எதிர்வரும் 19ஆம் திகதி வரை இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகமும் 11 பிரதேச செயலகப் பிரிவுகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

இந்தக் காலப்பகுதிக்குள் கிராம உத்தியோகத்த அலுவலகங்களும் எழுமாறாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இந்த நடவடிக்கையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 28 அதிகாரிகள் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.