100 மெட்ரிக் தொன் ஒட்சிசனை கொள்வனவு செய்ய தீர்மானம்
14.08.2021 08:24:56
இந்தியாவிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் ஒட்சிசனை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் 19 சிகிச்சை மத்திய நிலையங்களுக்காக அடுத்த வாரம் குறித்த ஒட்சிசன் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.