பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் - ரவூப் ஹக்கீம் எம்.பி. சந்திப்பு.

05.10.2026 15:27:40

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கலாநிதி நய்யார் நஸீரை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இன்று (5) மாலை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் இருவரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டுள்ளனர்

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ரவூப் ஹக்கீமுக்கு நினைவுச்சின்னமொன்றையும் வழங்கியுள்ளார்.