இந்தியாவின் புதிய Pinaka-IV ரொக்கெட்!

11.07.2025 14:17:25

உலகின் எந்தவொரு வான் பாதுகாப்பு அமைப்பாலும் தடுக்கமுடியாத வகையில் இந்தியா அதன் புதிய Pinaka-IV ஆயுதத்தை உருவாகிவருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு சக்தி தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. தற்போதைய முயற்சியாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO, 300 கிமீ தூரம் வரை இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறனுள்ள Pinaka-IV எனும் அடுத்த தலைமுறை வழிகாட்டும் ரொக்கெட் அமைப்பை உருவாக்கி வருகிறது.

இந்த ரொக்கெட் அமைப்பு, தடுப்பு ரேடார்களைத் தாண்டி தாக்கும் திறனுடன், 'Pralay' ரக திட பிரயோகக் குண்டுகளின் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்படுகிறது.

2028-ஆம் ஆண்டு முதல் பரிசோதனைக்காக தயார் செய்யப்படுகிறது என IDRW (Indian Defence Research Wing) தெரிவித்துள்ளது.

1999-ல் கார்கில் போருக்குப் பின்னர், இந்திய இராணுவத்தில் பினாகா மல்டி-பிரேல் ரொக்கெட் லாஞ்சர் (MBRL) இடம் பெற்றது.

Pinaka Mk-I-ன் வரம்பு 40 கிமீ. பின்னர் Mk-II, Mk-III ஆகியவையாக வளர்ச்சியடைந்து 120 கிமீ வரையிலான தாக்குதல் தூரத்தை (Range) எட்டியது.

புதிய பினாகா-IV, 300 மிமீ விட்டத்துடன் வரும் அதி சக்திவாய்ந்த ரொக்கெட் ஆகும். இது 250 கிலோ வரை வெடிகுண்டை (warhead) ஏந்தும் திறனுடையது.

DRDO-வின் RCI (Research Centre Imarat) உருவாக்கிய புதிய முனைவழி, நிலைதக்குத்தன்மை மற்றும் வழிகாட்டல் (GNC) அமைப்பு மூலம், இந்த ரொக்கெட் 10 மீட்டருக்குள் துல்லியமாக இலக்கை தாக்கும் திறன் பெறுகிறது.

இந்த புதிய முயற்சி, சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிரான பாதுகாப்பு ரீதியான முனைப்புக்கு உதவக்கூடியது என்பதோடு, இந்தியாவின் தீவிர பாதுகாப்பு தன்னிறைவு நோக்கத்தை வலிமைபடுத்துகிறது.