மின்கம்பி ஒன்றில் சிக்குண்டு ஒருவர் பலி
05.09.2021 05:35:39
மஹவ கடவலே பகுதியில் சட்டவிரோதமாக காணப்பட்ட மின்கம்பி ஒன்றில் சிக்குண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மஹாவ பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சரீரம் பிரேத பரிசோதனைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மஹாவ காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.