
தென் கொரிய ஜனாதிபதியின் மனைவி கைது!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) இன் மனைவி, பங்குச் சந்தை மோசடி மற்றும் இலஞ்சம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (12) சியோலில் நடந்த நான்கு மணி நேர நீதிமன்ற விசாரணையின் போது முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீ (Kim Keon Hee) அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
ஆனால், அவர் ஆதாரங்களை அழிக்கக்கூடும் என்ற அபாயத்தைக் காரணம் காட்டி நீதிமன்றம் தடுப்புக்காவல் உத்தரவை பிறப்பித்தது.
தென் கொரியாவில் உள்ள BMW தரகரான Deutsch Motors இன் பங்குகளை உள்ளடக்கிய விலை நிர்ணய திட்டத்தில் பங்கேற்றதன் மூலம் 52 வயதான கிம் 800 மில்லியன் வோன் ($577,940; £428,000) பணம் ஈட்டியதாக வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்.
அவரது கணவர் நாட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு இது நடந்ததாகக் கூறப்பட்டாலும், அவரது ஜனாதிபதி பதவி காலம் முழுவதும் இது தாக்கம் செலுத்தியது.
தென் கொரியாவில் முன்னாள் ஜனாதிபதிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வரலாறு உள்ளது.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் முதல் பெண்மணி இருவரும் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறை.
கடந்த ஆண்டு தோல்வியடைந்த இராணுவச் சட்ட முயற்சி தொடர்பாக விசாரணையை எதிர்கொண்ட யூன் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
இது நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தியது, இறுதியில் அவர் பதவி நீக்கம் செய்ய வழிவகுத்தது.