கள்வர்களையே அரசாங்கம் தொடர்ந்தும் பாதுகாக்கின்றது

27.03.2024 08:14:37

வாழ்க்கை செலவினை அதிகரித்து அரசாங்கம் கள்வர்களை பாதுகாக்கும் நடவடிக்கையினையே மேற்கொண்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. ஆனால் வருமானம் அதிகரிக்கவில்லை.

வரவின்றி செலவு அதிகரித்துச் செல்கின்றது. பொருளாதார ஸ்திரதன்மை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுமாயின் வாழ்க்கைச் செலவு குறைவடைய வேண்டும்.

மின்சாரக் கட்டணம் நீர்க்கட்டணம் குறைவடைய வேண்டும். நடைமுறையில் அவ்வாறு எதனையும் செய்யாமல் பொருளாதார ஸ்திரதன்மை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறமுடியாது.

எனவே பொருளாதா கொள்கை தவறாக காணப்படுகின்றது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டில் பலர் வேலைவாய்ப்பு இன்றி உள்ளனர்.

தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ளன. கோப் குழுவின் தலைவராக கள்வரை நியமித்துள்ளனர். கள்வர் மற்றுமொரு கள்வரை பிடிக்கமாட்டார்.

எனவே அரசாங்கம் கள்வர்களை பாதுகாக்கும் நடவடிக்கையினையே தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளது” என விஜித்த ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.