சீனத் தூதுவரின் கருத்துக்கு கஜேந்திரகுமார் கண்டனம்!
30.11.2024 09:31:01
சீனத் தூதுவர் தமிழ்த் தேசியத்தை குழப்பிவிடும் வகையிலும், தமிழ் மக்களின் வேணவாக்களுக்கு எதிராகவும் கருத்துரைக்கக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். |
யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் வந்திருந்த சீனத் தூதுவர் தேர்தல் முடிவுகளை வரவேற்றிருந்தார். 'வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்திருப்பது வரவேற்கத் தக்கது. இந்த மாற்றத்தை வரவேற்கின்றோம். நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்துக்கு தமிழர்கள் ஒரு சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளனர்' என்றவாறாக சீனத் தூதுவர் தெரிவித்திருந்தார். தூதுவரின் இந்தக் கருத்துக்களையே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டித்துள்ளார். |