ஒன்றியம் மீண்டும் விடுத்துள்ள அறிவிப்பு!

03.11.2022 10:41:38

தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக சமாளிப்பதற்கான சிறிலங்காவின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்குழுவின் 06ஆவது கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இதனைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

 

 

 

 

அரசியலமைப்புச் சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை மீள ஸ்தாபிப்பதுடன் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதையும் இலக்காகக் கொண்ட அரசியலமைப்பின் 21வது திருத்தம் குறித்தும் சிறிலங்கா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இதன்போது தெளிவுப்படுத்தியுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

 

 

 

 

இதனையடுத்து, மிகவும் அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே அது நடைமுறைப்படுத்தப்படும் என சிறிலங்கா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை குறித்தும் இங்கு விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.