யாழில் மாட்டுப்பொங்கலை ஒட்டிய வகையிலான பண்பாட்டுப்பேரணி

16.01.2023 21:39:06

உலகமெங்கிலும் பரந்து வாழக்கூடிய தமிழர்கள் தங்களது உழவுத்தொழிக்கு உறுதுணையாக இருக்கும் சூரியன் மற்றும் ஏனைய உயிரிகளுக்கு நன்றி செலுத்துகின்ற பண்பாடு காலாகாலமாக பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்த நாள் உழவுத்தொழிக்கு உதவிபுரியும் மாடுகளுக்கு நன்றி சொல்லும் வகையில் மாட்டுப்பொங்கல் நிகழ்வு கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் மாட்டுப்பொங்கலை ஒட்டிய வகையிலான பண்பாட்டுப்பேரணி இடம்பெற்றது மாடுகளை பாதுகாக்க வலியுறுத்தி யாழ் பல்சமய ஒன்றியம் மற்றும் யாழ் வர்த்தகர்களும் ஒன்றிணைந்து குறித்த பேரணியை யாழ்ப்பிரதான வீதி ஊடாக முன்னெடுத்திருந்தனர்.

குறித்த பேரணியில் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டதோடு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மாடுகளுக்கு பழங்களும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.