விஜய் சேதுபதியின் புதிய படத்தின் தலைப்பு வெளியீடு.

13.08.2026 12:06:00

விஜய் சேதுபதி – இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணிதரன் இணையும் மூன்றாவது திரைப்படம் இதுவாகும்.

‘VJS 56’ என அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு தற்போது ‘பத்தா’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இப்படத்தை இயக்குநர் அட்லீயின் தயாரிப்பு நிறுவனமும், ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 – சினி1 ஸ்டுடியோஸ் நிறுவனங்களும் இணைந்து தயாரித்து வருகின்றன.

இந்நிலையில், ‘பத்தா’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.