பிரித்தானிய பிரஜைகள் மீது பழி போடுகிறதா ரஷ்யா..!

02.07.2022 16:56:08

உக்ரைனில் வைத்து கைது செய்யப்பட்ட மேலும் இரு பிரித்தானியர்களை கூலிப்படையினர் என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைனில் தன்னார்வ தொண்டு பணியாற்றிய டிலான் கீலி Dylan Healy என்ற பிரித்தானிய பிரஜை கடந்த ஏப்ரல் மாதம் சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, அன்றைய தினம் Andrew Hill எனும் பிரித்தானிய பிரஜை இராணுவ சீருடையில் சரணடைந்துள்ளதாக ரஷ்யா காணொளி ஒன்றை வெளியிட்டது.

ஏற்கனவே பிரித்தானிய பிரஜைகள் இருவருக்கு ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களினால் மரண தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, இவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை ரஷ்யா முன்வைத்துள்ளது.

குறித்த இருவர் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.