பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை
09.10.2021 07:36:40
வடக்கு மாகாணத்தில் முதல் கட்டமாக ஆரம்ப பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு மாகாண கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது.
200 மாணவர்களுக்கு உள்பட்ட ஆரம்ப பாடசாலைகளை ஒக்டோபர் 21ஆம் திகதி வியாழக்கிழமை மீள ஆரம்பிப்பதற்கு அனைத்து மாகாண ஆளுநர்களும் கூட்டாகத் தீர்மானித்தனர்.
அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட 680 ஆரம்பப் பாடசாலைகள் ஒக்டோபர் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பை வடக்கு மாகாண கல்வி அமைச்சுக் கேட்டுள்ளது.