ஜனாதிபதி அநுரவுக்கு ரணில் விக்கிரமசிங்க பாராட்டு!

01.12.2024 09:17:13

தற்போதைய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் இணைந்து செயற்பட்டு வருவது  தொடர்பாக  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு  தான் பாராட்டு தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் ஹோட்டல் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில்  அமைச்சர் விஜித ஹேரத், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல அதிதிகள் கலந்துகொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.