இந்தியாவுடனான விமான சேவையை இரத்து செய்தது அவுஸ்ரேலியா !

28.04.2021 10:55:38

இந்தியாவுடனான பயணியர் விமான சேவையை அவுஸ்ரேலியா இரத்து செய்துள்ளது.

கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ‘ இந்தியாவில் கொரோனா மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் இந்தியாவிற்கான அனைத்து பயணியர் விமான சேவைகளும்  மே மாதம் 15 ஆம் திகதிவரை இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து வரும் விமான போக்குவரத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான தருணத்தில் இந்தியாவிற்கு அவுஸ்ரேலிய மக்கள் முழு ஆதரவை தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளனர். ‘ எனத் தெரிவித்துள்ளார்.