ஐ.நா மனித உரிமையாளருக்கான கடிதத்தில் சம்பந்தன் தரப்பினர் கையெழுத்திட மறுப்பு

05.09.2021 11:45:01

இலங்கை தமிழரசு கட்சி தவிர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களது கையொப்பத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

ஐந்து கட்சிகள் இந்த கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரன் மற்றும் விநோநோகராதலிங்கம் ஆகியோர் இதில் கைச்சாத்திட்டுள்ளனர்.

அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் என்.சிறிகாந்தா ஆகியோரும் இதில் கைச்சாத்திட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து இந்த கடிதத்தில் விளக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகள் குறித்த கடிதத்தில் கைச்சாத்திட்டிருக்கவில்லை.

இந்தநிலையில் அந்த கட்சியின் பிரதிநிதிகள் நாளைய தினம்  கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் இந்த விடயம் குறித்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறித்த கடிதத்தில் கைச்சாத்திட மறுத்துவிட்டதாக குறிப்பிட்டார்.