கனேடியத்தூதுவர் விஜயம்

15.02.2025 11:24:35

வடக்கு மாகாணத்திற்கு இலங்கைக்கான கனேடியத்தூதுவர் எரிக் வோல்ஷ் நேற்று (14) வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார்.

வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு சென்றதுடன்இ வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.

இதன் போது இலங்கைக்கான கனேடியத் தூதுவருக்கு வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள்இ தேவைப்பாடுகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கள்இ சுற்றுலாத்துறையின் அபிவிருத்திஇ பாதை வலையமைப்பு தொடர்பாக மேம்பாடு ஆகிய விடயங்கள் தொடர்பாக வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

மேலும்  பலாலி விமான நிலையத்துக்கு கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சேவைகள் இடம்பெற்றால் சிறப்பானது எனவும், அத்துடன் தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுவதாகவும் குறிப்பிட்ட தூதுவர். அரசாங்கம் கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்கள் ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.