22வது திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

18.08.2026 14:59:47

பாராளுமன்றத்தில் இன்றையதினம் சமர்ப்பிக்கப்பட்ட 22 ஆவது திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

 

இதன்போது ஜனநாயகத்திற்கு எதிராக அரசாங்கம் செயற்படுவதாக கூறி, கையில் கேலி சித்திரத்தை வைத்து ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, பாராளுமன்ற அமர்வுகளில் உறுப்பினர்கள் முன்வைக்கும் கருத்துக்களுக்கு சபாநாயகர் செவி சாய்ப்பதில்லை என்றும் அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போதைய சபாநாயகரை மாற்றி ஜனநாயக ரீதியில் செயற்படும் ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.