வவுனியாவில் 46 பேருக்கு கொரோனா
25.09.2021 06:21:08
வவுனியாவில் கொரோனா தொற்று 46 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக கொரோனா தொற்று 46 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களையும், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.