மீண்டும் வரிசை யுகம்..!

20.10.2022 09:33:10

நேரடி வரி அறவீடு உட்பட புதிய வரி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போனால், மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.

வரி கொள்கை சம்பந்தமாக நேற்று விசேட உரையை நிகழ்த்தும் போதே அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டின் வருமானத்தை அதிகரிக்காது, பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது. நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் விருப்பமின்றியேனும் கடினமான தீர்மானங்களை எடுக்க நேரிடும்.