பிரிட்டனுக்கு எதிரான யோசனையில் இலங்கை கைச்சாத்து !

15.07.2021 10:02:05

பிரித்தானிய மனித உரிமைகள் நிலைமை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் சீனாவினால் தயாரிக்கப்பட்டுள்ள கூட்டு அறிக்கை ஒன்றில் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தக் கூட்டு அறிக்கையானது ஜெனீவாவில் நடைபெற்றுவருகின்ற ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 47ஆவது அமர்வில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நாடுகள் பலவற்றின் விடயங்கள் குறித்து பேசுவது மிகவும் கௌரவத்திற்குரியதாகும். ஐக்கிய இராஜியத்தின் தனித உரிமைகள் நிலைமை தொடர்பாக எமது ஆழமான கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் , இனவாத, பிரிவினை ஏற்படத்தல். குரோதப் பேச்சு, பீதி மற்றும் அவற்றுடன் தொடர்புபட்ட வன்முறைகள் ஐக்கிய இராஜியத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றன” என்று குறித்த அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றியிருக்கும் சீனப் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் அடிமைத்தனக் காலத்தில் ஆபிரிக்க வர்த்தகர்களின் வணிகச் செயற்பாடுகள் தொடக்கம், ஐக்கிய இராஜியத்தின் வரலாற்றில் மேற்கூறப்பட்ட விடயங்கள் வித்தியாசமான பாணியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய இராஜியத்தின் இராணுவ சேவையிலிருந்த குழுவினர், சர்வதேச நடவடிக்கைளின்போது. சிவிலியன்களைப் படுகொலை செய்தமை மற்றும் புதிய சட்டதிட்டங்களை உருவாக்கி அதனூடாக பொறுப்பற்று, குறிப்பிட்ட படுகொலையை நிகழ்ச்சியவர்களைப் பாதுகாப்பதற்கான புது முயற்சியிலும் ஐக்கிய இராஜியம் ஈடுபட்டதாகவும் சீனா குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும்  ஐக்கிய இராஜியமானது, சர்வதேசத்தில் வேறு நாடுகளின் உள்ளக விடயங்களில் தலையீடு செய்து, மனித உரிமை மீறல்கள் என்பதை முன்நிறுத்தி அந்த நாடுகளின் உரிமைகளையும் பறித்து அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதாகவும் ஜெனீவாவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.