கச்சத்தீவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமாகி 50 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இலங்கை அத்தீவின் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொள்ளாமல் புறக்கணித்துள்ளது. அத்தீவில் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான காலம் வந்துவிட்டது என்றும் 'பாத்பைண்டர் அமைப்பு' வலியுறுத்துகிறது.
அத்தீவை பயன்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக 'பாத் பைண்டர்' அமைப்பினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலொன்றில், அதன் தலைவரும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளருமான பெர்னாட் குணதிலக தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த கருத்துக்கள்
அத்தீவில் கடற்படை முகாமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதைத் தவிர, வருடத்திற்கு ஒருமுறை நடாத்தப்படும் மத விழாவைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் அங்கு இடம்பெறுவதில்லை என்றும் அமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
பொட்டம் ரோலிங் மீன்பிடி முறை காரணமாக இலங்கைக்குச் சொந்தமான கடல் வளம் அழிக்கப்படுவதாகவும், எமது மீன்வளங்கள் டொன் கணக்கில் அழிவடைவதாக கூறப்பட்டாலும், ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட சரியான தரவுகள் இன்மையால் அது பற்றிய உண்மையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போயுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆகவே, கச்சத்தீவை மையமாகக் கொண்டு ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து இலங்கை அரசாங்கம் இப்போது சிந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதன்போது கருத்துத் தெரிவித்த பாத்பைண்டர் அமைப்பின் உறுப்பினர், அட்மிரல் டொக்டர் ஜெயநாத் கொலம்பகே குறிப்பிடுகையில்,
இலங்கை கடற்படையானது கச்சத்தீவுக்கு அருகாமையில் இந்திய மீனவர்களைக் கைது செய்வதை மேற்கொள்வதில்லை என்றார்.இரணைதீவு, அனலைதPவு மற்றும் நெடுந்தீவு ஆகியவற்றுக்கு அருகில் வரும் இந்திய மீனவர்களே கைது செய்யப்படுகிறார்கள் என்றார்.